உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

ஒப்பியன் மொழிநூல்

செய்யும் செய்ம்ம - செய்வ.

செய்யுமன செய்ம்மன - செய்வன.

உண்ணுமான்

-

-

உண்மான்

-

உண்பான். நடக்குமான்

நடப்பான். இனி, செய்வு நடப்பு என வுவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறுபெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு + ஆன் = செய்வான், நடப்பு + ஆன் = நடப்பான்.

"ஆ ஓ வாகும் பெயருமா ருளவே"

(தொல்.679)

என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையாலணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும். வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயரு மாக இருவகை வடிவிலிருக்கும்.

கா: இ கா. நி.கா.

(1) செய்தான்

செய்கின்றான்

எ.கா.

செய்வான்

(2) செய்த(அ)வன் செய்கின்ற(அ)வன் செய்யுமவன் -

நடந்த(அ)வன்

செய்யுபவன்

செய்பவன்.

நடக்கின்ற(அ)வன் நடக்குமவன் -

நடக்குபவன்

-

நடப்பவன்.

அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுகள் பாலீறு பெற்றுவிட்டன. அஃறிணைப் படர்க்கை யிருபாற்குமட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது; ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும் செய்யும, செய்ம்ம என்பவை செய்யுப செய்ப என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப் பட்டன. ம் -ப, போலி. இனி, செய்பு + அ = செய்ப என்றுமாம்.

வினைமுற்றுகள் எச்சப்பொருளில் வழங்குவதுண்டு.

கா: செய்வான்

வந்தான்

படிப்பான்

வந்தான்

செய்ம்மார்

வந்தார்.