உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

+அ=

143

நிலீயர் - நிலீய -நிலிய. ஈயல் + ஈயர் - ஈய - இயஅ க. ஈயர் -இயர் செய்யிய - செய்ய. செய்கு + அ = செய்க. போகு + அ = போக. நட + அ நடக்க. போக நடக்க முதலிய சொற்களின் ஈற்றில் அகரம் ககர மெய்யோடு சேர்ந்து நிற்பதால், 'க' ஒரு வியங்கோளீறாகக் கூறப்பட்டது. வியங்கோள் பாலீறும் எண்ணீறும் பெறாமையால் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

செய்ய என்னும் வினையே, ஏவல், வியங்கோள், நிகழ்கால வினையெச்சம், தொழிற்பெயர் என்னும் நால்வகையில் வழங்கும். இவ் வியல்பு ஆங்கிலம் இந்தி முதலிய பிறமொழிகளிலும் உள்ளது.

செய்யியர் - செய்யிய - செய்ய (செய) என்பவை தொல்காப்பி யத்தில் எதிர்கால வினையெச்சங்களாகக் கூறப்பட்டன. இவற்றுள், ‘செய்ய' என்னும் வடிவமே நிகழ்கால வினையெச்சமாகவும் கூறப்படும். எதிர்கால வினையும் நிகழ்கால வினையென வழங்கினதை, ‘மலை நிற்கும்', 'ஞாயி றியங்கும்' என, எதிர்கால வினைமுற்றுகளையே முக்காலத்திற்கும் பொதுவான பொருளைக் குறிக்கும் நிகழ்கா வினைகளாக, உரையாசிரியர்கள் வழிவழிக் கூறினதினாலும், இன்றும் நீர் குளிரும் தீச்சுடும் என எதிர்கால வினைமுற்றுகளே அப்பொருட்கேற்பதினாலும், அறிந்து கொள்ளலாம்.

நிகழ்கால வினையெச்சம் முதலாவது தொழிற் பெயராயிருந்தது. செய்யல்- செய்ய. ஆங்கிலத்திலும் இங்ஙனமே.1

ஏவல்

எதிர்மறை வினை

ஒருமை - செய் + அல் :

செய் + அல் = செய்யல் - செய்யேல். அல் என்பது

எதிர்மறைக் குறிப்புவினை.

செய்யாய் + த் = (செய்யாய்தீ) - (செய்யாதீ) - செய்யாதி.

(செய்யாதீ) - செய்யாதே - செய்யாதை.

பன்மை - செய்யல் + மின் = செய்யன்மின்.

செய்யாதீ + ஈர் = செய்யாதீர்.

+ இர் = செய்யாதிர்.

+ கள்.

+ கள்.

செய்யாதே + உம் = செய்யாதேயும்.+ கள்.

11. Historical Outlines of English Accidence, p.258