உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

ஒப்பியன் மொழிநூல்

(3) திரிவேற்றுமைப்பெயர். கா : பிறகால், வெளியில். (4) வினையெச்சவீற்றுப்பெயர். கா : நன்றாய், நன்றாக. (5) முற்றெச்சம். கா: வேலினன் (வந்தான்).

செயப்பாட்டு வினை

(1) நிகழ்காலவினையெச்சம் + படு (to suffer). கா : செய்யப் படு. செயப்படுவது செயப்பாடு. செயப்பாட்டைக் கூறும் வினை செயப்பாட்டுவினை.

(2) முதனிலைத்தொழிற்பெயர் + உண் (to experience, lit. to eat). கா : கொல்லுண்.

(3) ஈறுபெற்ற தொழிற்பெயர் + உண். கா : கொலையுண்.

(4) ஈறுபெற்ற தொழிற்பெயர் + ஆ (to become), போ முதலியன. கா : கொலையானான், விலைபோகும்.

தமிழ்ச் செயப்பாட்டு வினைமுறை ஆங்கில முறையினின் றும் வேறுபட்டிருப்பதுகொண்டு, தமிழில் உண்மையான செயப்பாட்டு வினையில்லையென் றயிர்த்தார் கால்டுவெல் ஐயர். ஆங்கிலச் செயப்பாட்டு வினைப்பெயரே தமிழ்ச்சொல்தான்.

Patl3

E. passive, adj. Fr.,

-

=

L. passivus, from patior, to suffer (root connected with Gk. pascho), pat படு, passion = பாடு . t - s, போலி (Permutation).

பிறவினை (Causal Verb)

பிறவினை என்பது இருமடி அல்லது பன்மடி ஏவல்.

"செய்யென் வினைவழி விப்பி தனிவரின்

செய்வியென் னேவ லிணையினீ ரேவல்"

என்று நன்னூலாருங் கூறுதல் காண்க.

(138)

தொழிற்பெயர் ஏவல்வினையாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. துணைவினை பெற்றவையொழிந்த, ஏனைய பிற வினை வடிவுகளெல்லாம் தொழிற்பெயர்களே.

13 Cassell's Latin Dictionary, p. 396