உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

ஒப்பியன் மொழிநூல்

உரிச்சொல்

-

உரிச்சொல் முன்னர்க் கூறப்பட்டது.

உடம் -(உட) -(உடி) உரி உரிமை = உடமை. உடனுள்ளது உடமை. உடல் - உடன். ஒ.நோ: தொலி - தோல் - தோறு-தோடு. தொலி தொறு = கூட. தொறு + உம் = தொறும். தோட = கூட. உரி = தோல். உடீஇ என்பவற்றை நோக்குக.

உடு, உடீ

பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள்

ஒரு வழங்கு மொழியின் சொற்கள் இயல்பாக நூல் வழக்கில் ஒரு தொகுதியும் உலக வழக்கில் ஒரு தொகுதியுமாக இரு கூற்றாகவே யிருக்கும். வடமொழி போன்ற வழக்கற்ற மொழியாயின், எல்லாச் சொற்களையும் நூல்வழக்கினின்றே அறிய முடியும். தமிழ் போன்ற வழங்கு மொழியாயின், எல்லாச் சொற்களையும் தொகுக்க வேண்டுவார் இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில், இதுபோது தமிழில் தலைமை தாங்குபவர் பெரும்பாலும் பார்ப்பனர். அவர் நாட்டுப்புறத்தாரோடும் தாழ்த்தப்பட்டாரோடும் அளவளாவு நிலையினரல்லர். தமிழ் வழக்கு இதுபோது பார்ப்பனத்தொடர்பு மிக மிக வடசொல் மிகுந்தும், அது குறையக்குறைய வடசொற் குறைந்தும் உள்ளது.

பல்கலைக்கழக அகராதி முடியும்வரை, சொல்லாராய்ச்சி யுள்ளவர் ஒருவராவது அதன் தொகுப்புக்குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை.

மேலும், அத் தொகுப்புக்குழுவினர் பெரும்பாலும் மர ஊணினர். அதனால் ஊனுணவுபற்றிய பல சொற்கள் அவ் வகராதியிற் காணப்படவில்லை.

அவர் உலக வழக்கையாராயாதது மட்டுமன்று, நூல் வழக்கை யும் சரியாய் ஆராய்ந்திலர். முதலாவது பல அகராதிகளினின் றே சொற்களைத் தொகுத்ததாகத் தெரிகின்றது. ஏனென்றால், கருமுக மந்தி, செம்பின் ஏற்றை, கருங்களமர், வாய்ச்சியாடல் முதலிய பல சொற்கள் அகராதியிற் காணப்படவில்லை.

அகராதித்தொகுப்பு 27 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின் றது; 4,10,000 உருபாக்களும் செலவாகியிருக்கின்றன. ஆகையால், காலம் போதாதென்றொரு காரணங்கூறி, அகராதியின் குறையை மறைக்க