உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

155

முடியாது. ஆராய்ச்சியாளனாயின், இதுவரை சென்றுள்ள செலவில் 1/ 8 பங்கிற்கு, இதினும் சிறந்த அகராதி ஒருவனே தொகுத்திருக்கக்கூடும் என்று கூறுவது மிகையாகாது.

இப்போது அனுபந்தம் முதற்பாகம் என்றொரு பகுதி வெளிவந்துளது. அதிலும் சில சொற்களைக் காணோம்.

பல்கலைக்கழக அகராதியின் குறைகள் பின்வருமாறு பல

திறப்படும்.

(1) எல்லாச்சொற்களு மில்லாமை.

(2) உள்ள சொற்கட்கு எல்லாப்பொருளும் கூறப்படாமை. (3) காட்டக்கூடிய சொற்கட்கெல்லாம் வேர்காட்டப் படாமை. (4) காட்டிய வேர்ச்சொல் தவறாயிருத்தல்.

(5) பல தென்சொற்களை வடசொற்களாகவும் பிறசொற்க ளாகவும் காட்டியிருத்தல்.

முடியாத

தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல்கொண்டதினாலும், பல தமிழ்க் கலைகளும் நூல்களும் அழிந்துபோனதினாலும், பண்டைத் தமிழின் பல சொற்கள் மறைந்துபோனமையால், இதுபோது எல்லாத் தமிழ்ச்சொற்கட்கும் வேர்காட்ட துண்மையே. ஆயினும், சொல்லியல் நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பின், பல சொற்கட்கு வேர் காட்டல் கூடும். இப்போதே இஃதாயின், தொல்காப்பியர் காலத்தில் எத்துணை எளிதாயிருந் திருக்கும்? ஆயினும், வேர் காண்டல் எல்லார்க்கும் எளிதன்று. இதனாலேயே,

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் தொல்காப்பியர்.

(உரி. 98)

'விழிப்ப' என்பது விழித்தமட்டில் அல்லது பார்த்தமட்டில் என்று பொருள்படும். 'விழிப்பத் தோன்றா' என்பதற்கு "beyond ascertainment” என்று, பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரிய ராகிய உயர்திரு வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியிருப்பது தவறாகும்.