உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

ஒப்பியன் மொழிநூல்

பல்கலைக்கழக அகராதியில், தென்சொற்கள் வடசொற் களாய்க் காட்டப்பட்டிருப்பதற்கு, இரு காட்டுத் தருகின்றேன்.

(i) மயில் < மயூர (வ.)

மை = கருப்பு. மயில் = கரியது, பச்சையானது. கருமை நீலம் பச்சையென்பன இருவகை வழக்கிலும் ஒன்றாகக் கூறப்படு வதுண்டு. பச்சை மயில் நீலக்கலாபம் என்னும் வழக்குகளை நோக்குக. காளி, நீலி என்பன கொற்றவையின் பெயர்கள். திருமாலின் நிறம் கருமை நீலம் பசுமை என முத்திறத்திற் கூறப்படும். நீலச்சேலையைக் கருப்புச்சேலை யென்பது உலக வழக்கு. சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் தென்னாட்டிற்குச் சிறப்பாயுரிய குறிஞ்சிப் பறவையாகும். மயில் என்னும் தமிழ்ச்சொல்லே மயூர என்று வடசொல்லில் வழங்குகின்றதென்க.

(ii) வடவை

வடவா (வ.)

வடதுருவத்தில் சில சமையங்களில் தோன்றும் ஒளி வடவை யெனப்பட்டது.வடக்கிலிருந்து வரும் காற்றும் வடவை வடந்தை எனப்படும். வடவை ஒளி அல்லது தீ. ஆங்கிலத்தில் Aurora Borealis என்றழைக்கப்படும்.

Arora Borealis, the northern aurora or light; L. aurora, light; borealis, northern - boreas, the north wind.

று

கிரேக்கர் வடகோடியில் வாழ்ந்த ஒரு வகுப்பாரை Hyper- boreans என்றழைத்தனரென்றும். அப் பெயர் மலைக்கப்பாலர் என்று பொருள்படுமென்றும், Boreas என்பது வடகாற்றின் பெயரென்றும், அது முதலாவது மலைக்காற்று என்றே பொருள் பட்டதென்றும், Boros என்பதின் பொருள் மலையென்றும், மாக்கசு முல்லர் எழுதிய 'மொழிநூற் கட்டுரைகள்' என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில், 8ஆம் 9ஆம் பக்க அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

இதனால் boros அல்லது boreas என்பது பொறை என்னும் தமிழ்ச்சொல்லே யென்றும். Hyperborean என்பது உப்பர்ப் பொறையன் என்றமையும் தமிழ்த்தொடர் என்றும் தெரிகின்றது.