உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




157

வடவை வடமுகத்தில் தோன்றுவதால் வடவைமுகம் என்றுங் கூறப்படும். ஒ.நோ: துறைமுகம்.

ஆல்ப்வ்ரெட் ரசல் உவாலேஸ் என்பவர், மலேயத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த முக்க(Muka)த் தீவில், தாம் வடவைத் தீயைக் கண்டதாகக் கூறுவதால்," தமிழர் வடவைத் தீயைக் கண்டிருந்தார் என்பதில் எட்டுணையும் ஐயத்திற்கிடமின்று.

வடவை

என்னும் தமிழ்ச்சொல்லைப் படபா என்றும், வடவைமுகம் என்பதைப் படபா முகம் என்றும் வடமொழியில் திரித்துக் கொண்டு, பெட்டைக் குதிரையின் வடிவானது என்று அதற்குப் பழைமையர் கூறிய பொருளை இவ் விருபதாம் நூற்றாண்டிலும் கூறினால், மேனாட்டுக்கலை இந் நாவலந் தேயத்திற்கு வந்து என்னதான் பயன்?

ஒரு மொழியின் பெருமையை உணர்த்தும் நூல்களில் அகராதியும் ஒன்றாகும். தமிழகராதி இங்ஙனமிருப்பின், அம் மொழியின் பெருமை எங்ஙனம் புலனாகும்? அகராதிக்கு வராது எத்துணையோ சொற்கள் நாட்டுப்புறங்களில் வழங்கு கின்றன.

தமிழே திராவிடத்தாய்

தமிழே திராவிடத்தாய் என்று, இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில், வெள்ளிடைமலையாய் விளக்கப்படும்.

தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் ('Italian of the East') என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டு மன்று, இவ் வுலகிற்கே இலத்தீன் (Latin of the Uni- verse) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழி கட்கெல்லாம் பொதுச்செல்வம்; ஆயினும், ஆரியத்தால் மயங்கிய பிற திராவிட மொழிகள் தமிழ்த் தொடர்பை முற்றிலும் விட்டு விட்டன. ஆனால், தென்சொல் கலவாமல் ஏனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலாயினும் ஒரு விரிவான சொற்றொடரும் அமைக்கமுடியாது.

14 The Malay Archipelago, p. 402