உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

ஒப்பியன் மொழிநூல்

கலியாணகாதை, களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கைபாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள்நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கைபாடினியம், சிறுகுரீஇயுரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக் கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனா பதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை,

பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது), புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதரகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக்கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை.

பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி, ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடகநூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம், பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம், திரு வல்லையந்தாதி முதலியவை, இதுவரை யறியப்படாத நூல்களாகச் சாஸனத் தமிழ்க்கவி சரிதத்திற்

குறிக்கப்பட்டுள்ளன.

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல்களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளி வரவில்லை.

இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணா யிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந்தன வென்றொரு வழிமுறை வழக்குள்ளது.