உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

3

பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை,

“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள

என்னும் செய்யுளாலறியலாம்.

மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்துபோனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர்நிலைக்கல்வி யிழந் தமையும், இருபெருங் காரணங்களாகும்.

தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவுமான எத்துணையோ நூல்கள் இறந்துபட்டன.

அகத்தியர்

அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர்.

அகத்தியர் காலம்

அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழக் கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர்.

அகத்தியர் கதைகள்

(1) விந்தத்தின் செருக்கடக்கினது

ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்தியமலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்தபின், அதனொடு ஒப்புநோக்க விந்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெயரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரிநாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கி னவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது.

(2) கடலைக் குடித்தது

முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது.