உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு I

மா என்னும் வேர்ச்சொல்

மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல். மத - மதவு = மயக்கம், பேதைமை.

"மதவே மடனும் வலியு மாகும்" என்றார் தொல்காப்பியர்.

-

மத மதம் - மதர் = மயக்கம். மதம் - மத்தம் = மயக்கம், பைத்தியம். = - = நிலவினால் மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப் பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம் - மதன் = வலி.

ஒ.நோ: சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity), from luna, the moon. மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றுங் கூறப்பட்டன.

மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற்பொருள் பெற்றது. L metior, Goth, mitan. Ger. messen, A.S. metan, E. mete, Skt. மிதி. மதி - (மது) - மத்து-மட்டு.

மதி என்னுஞ் சொல்லே மா என் று மருவியிருக்கலாம்; ஒநோ பகு பா, மிகு -மீ. எங்ஙனமாயினும், மா என்னும் வேர்ச்

-

சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை.

மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு.

மா + அனம் = மானம் = அளவு. வருமானம் = வரும்படி.

மானம் என்னும் சொல் அளவு என்பதை அடி ப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும்.

மானம் = 1 படி (வடார்க்காட்டு வழக்கு)

= அளவு, ஒப்பு, கா: சமானம் (இரு.)

= அளவு, மதிப்பு, மானம் - honour (L.)

= மதிப்புப்பற்றியளிக்கும் பரிசு. கா : சன்மானம் (இரு.) = தன்மதிப்பு. "உயிர்நீப்பர் மானம் வரின்" (குறள். 969.)

= பெருமை.