உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் மொழித்துறையில் கிட்டத்தட்ட தமிழகம் பெற்றெடுத்த ஒரே ஓர் அறிஞர் என்று கூறத்தக்க வராயுள்ளார். அவருடன் பக்கத்திலோ, சற்றுத் தொலைவிலோ வைத்து ஒப்பிட, எண்ணக்கூடத் தமிழகம் மொழித்துறையிலே இன்னும் ஓர் அறிஞனைப் பெற்றுத் தரவில்லை... அவர் இயந்திர அறிஞர் அல்லர்; சோற்றுக்குத் தக்கபடி தாளமிடும் கூலி அறிஞரும் அல்லர்; தமிழினத்தின் உயர்வு உணர்ந்தவர்; அதில் பற்று உள்ளவர்; மொழிநூல் கற்றவர் மட்டுமல்ல, மொழி நூல் கற்பிப்பவர்; இயற்றுபவர் மட்டுமல்லர், மொழி நூலை ஆக்கும் சிந்தனை அறிஞர்.

- பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்

தமிழ்மன்

குறக்கட்டவை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.