உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

11

பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனையெதுகையொன்றே நோக்கி, வடசொற்களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கிவிட்டனர்.

(7) நூற்செய்யுள் வரவர இழிதல்

முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்க ளியற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங் களையே தெரிந்துகொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற் கெளிதாயிருத்தலின்.

(8) பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல்

கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்த தென்று, செந்தொடையாயினும் பொருள் சிறப்பச் செய்யுள் செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணி களையும், பலவகை ஓவிய(சித்திர)ச் செய்யுள்களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொருளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளியற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம்.

(9) நூற்பொருள் வரவர இழிதல்

முற்காலப் புலவர் மேனாட்டார்போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர்; பிற்காலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ்நூல் வகைகளையே இயற்றுவா ராயினர். ஒருவர் கோவை பாடிவிட்டால், தலைசிறந்த புலவராக மதிக்கப்படுவர். 'யாவையும் பாடிக் கோவையைப் பாடு' என்பது பழமொழி.

பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே. இதனால் பிற்காலத்தாரது கலையுணர்ச்சியின்மை வெளியாகும்.

செய்யுள்கட்கும் நூலளவுக்கும்

பிற்காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும்.

கடைக்கழகக்

குலமுறை வகுத்ததும்,

காலத்தில்

காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது

செய்யுள்கொண்ட நூலொன்றை யியற்றினர். பிற்காலத்துப்