உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

ஒப்பியன் மொழிநூல் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், 'நானாற்பது' என்றொரு நூல்வகையை வகுத்துக்கொண்டது நகைப்பிற் கிடமானதே. கலையுணர்ச்சி யிழந்தமையாலும், வடமொழியினின் றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணைநூல் என்னும் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங்(காவியம்)களில், நாட்டுப் படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதி நுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றையெல்லாம் புனைவாராயினர் பிற்காலப் புலவர்.

(10) ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல்

ஈர்

கடைக்கழகத்திற்கு முன்காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப் பெயர்களா யிருந் தமையும், பின்காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வடமொழிப் பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என்னும் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப் பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டன்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கினமையுங் காண்க.

(II) வரவர வடநூல் தமிழ்நூலுக் களவையாதல்

(12) தமிழர் பலதுறைகளிலும் வரவரக் கெட்டுவருதல்

கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை

பலர் டைக்கழக இலக்கியமே தமிழிலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதுவே இலக்கியமாயின், தமிழ் புன்மொழிகளில் ஒன்றாகவே வைத்தெண்ணப்படும்.

பதினெண் மேற்கணக்கான பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பவற்றுள், பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை என்ற நான்கே நூல் என்னும் பெயர்க்குச் சிறிது உரிமையுடையவை. இவையும் புகழும் அகப்பொருளும் பற்றியவையே ஏனைய நான்கும் தனிப்பாடற் றிரட்டுகள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தனிநூல்க ளாயினும், நன்னெறி அகப்பொருள் என்னும் இரு பொருள் பற்றியனவே.