உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

13

கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாற னுள்ளும் ஒன்றாவது கலைபற்றியதன்று, பாவியமுமன்று. அவற்றுள் ஆசாரக்கோவையோ வடநூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுப்பதாயும், எளிய பொருள்களைக் கூறுவதாயுமுள்ளது.

கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாறும், அக் கழகக் காலத்திலேயே தோன்றியவையல்ல. அவற்றுட் சில அதன் பின்னரே இயற்றவும் தொகுக்கவும்பட்டன. தொகை நூல்களெல் லாம் ஒருவரே ஒரே காலத்தில் தொகுத்தவையுமல்ல.

மேலும், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய பல கீழ்க்கணக்கு நூல்கள், கடைக்கழகப் புலவரா லியற்றப்படா மையும், மேற்கணக்கு பதினெட்டிற்கொப்பக் கீழ்க்கணக்கு பதினெட்டு வகுக்கப்பட்டமையும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு,

புறநானூறு

என்பன நந்நானூறு பாடல்களாய்த் தொகுக்கப்பட்டமையும் நோக்கி உணர்ந்துகொள்க. பதினெண் கீழ்க்கணக்குள் பதினெட்டாவது நூல், கைந்நிலையென்றும் இன்னிலையென்றும் இருவேறு கொள்கை நிலவுவதையும் நோக்குக.

சிறந்த நூல்களெல்லாம் அகத்தியர்க்கு முன்னமே தமிழில் இயற்றப்பட்டிருந்தன. பிற்காலத்தார் அவற்றை ஆராய்ந்தே வந்தனர்

என்பதை,

66

"" 66

"" 66

'தலைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரையென்ப டைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார்.... சங்க மிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை யென்ப" என்று முக்கழக வரலாற்றிற் கூறியதினின்றும் அறிந்துகொள்க.

அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை

அகத்தியர்க்கு முன் இந்திரன் என்ற ஓர் ஆரியர், தமிழிலக் கணம் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவ் விந்திரனுக்கு முன் ஆரியர் இலக்கணம் பெரும்பாலும் செய்திருக்க முடியாது.

"தலைச்சங்கமிருந்தார்.... நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார்