உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

ஒப்பியன் மொழிநூல் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின் மரென்ப" என்று, தலைக்கழகமிருந்த காலம் 89 அரச தலைமுறை யினதாகச் சொல்லப்படுதலால், அகத்தியர் அவ்வளவு கால மிருந்திருக்க முடியாதென்பது முழுத்தேற்றம். ஆகவே, தலைக் கழகத்தின் இறுதிக் காலத்தில், அல்லது அதன் பின்தான், அகத்தியர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கமுடியும். அவர் தென்மதுரை சென்ற சில ஆண்டுகளுக்குள், குமரிநாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டது. பின்பு அவர் ஓய்வுபெற்றுப் பொதியமலையில் தவமிருந்து தம் இறுதிக்காலத்தைக் கழித்தார். பாண்டியன் கபாடபுரத்தைக் கட்டி அங்கு இடைக் கழகத்தை நிறுவினான். அதில் தொல்காப்பியர் தலைமை தாங்கினார். அகத்தியர் அக்காலத்தில் இருந்தனரேனும், அக் கழகத்தில் றுப்பினரா யிருந்ததாகத் தெரியவில்லை. இடைக்கழகத்திலும் அவர் உறுப்பினராயிருந்ததாக முக்கழக வரலாறு கூறுவது, அவர் அக்காலத்திலிருந்தமை பற்றியேயன்றி வேறன்று. தலைக்கழகத்தை அவர் அமைத்தார் என்ற வரலாறு பொருந்தாதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒவ்வொரு கழகமும் பல தலைமுறையாக நடைபெற்றதென்றும், அவற்றுள் இறுதித் தலைமுறையிலிருந்த புலவர் தொகையே வரலாற்றிற் கூறப்படுகின்றதென்றும் அறிந்து கொள்க.

அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலிருந்து கடைக்கழகக் காலத்தில் கபில பரண நக்கீரரும், அண்மைக் காலத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களும், ராவ்சாஹிப் மு. இராகவை யங்கார் அவர்களும், ரா. இராகவையங்கார் அவர்களுமாகப் பெரும்பாலும் பார்ப்பனரே தமிழ்நூலுக் கதிகாரிகளா யிருந்து வருவது எவர்க்கும் தெரிந்ததே.

குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ் என்பதை அவர் அறிவாராக. தொண்டு, நும் என்னுஞ் சொற்களின் இயல்பு அகத்தியர் காலத்தவரான தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தினின்று பழங்காலம் நோக்கிச் செல்லச்செல்லத் தமிழில் வடசொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத்திலும் தொல் காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வடசொற்களாயிருத்த தலானும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணையும் வடசொற் கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழ ராலேயே

வழங்கப்பட்டதென்றும் அறிந்துகொள்க.