உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

15

பேரகத்தியம் என்று இதுபோது வழங்கும் நூல் பிற் காலத்தில் வடமொழிப்பற்றுள்ள ஒருவராற் செய்யப்பட்டது. அது பேரில்மட்டும் அகத்தியம் என்க.

அகத்தியர் சிற்றகத்தியம் பேரகத்தியம் என இருவேறு நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. அகத்தியம் வழக்கற்றபின், அதன் நூற்பாத் திரட்டுகளில், சிறியதும் பெரியதுமான இரண்டே முறையே அப் பெயர்பெற்று வழங்கியிருத்தல் வேண்டும்.

வடசொல்லைத் தமிழ்ச்செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச்ச.1) மொழிபெயர்ப்பை வழிநூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்த வில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப் பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரியவில்லை. னாலும், தொல்காப்பியத்தில் அங்ஙனங் கூறியிருப்பதால், அது தமிழி னின்றும் மொழிபெயர்த்த

ம்

ல்களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று, அவர்க்கு முன்னமே தொடங்கினதையே உணர்த்துவதாகும். இது வேண்டாத வட சொற்கள் தொல்காப்பி யத்தில் வழங்குவதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க.

அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை

அகத்தியர் காலத்திற்குமுன், தமிழ்நூல்கள் சிறிதுபோது கற்கப்படாதிருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும்.

(1) அகத்தியர் முருகனை நோக்கித் தவங்கிடக்க, அத் தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகளைக் காட்டிற்று என்ற கதை.

(2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு.

(3) தொல்காப்பியப் பாயிரத்தில் 'முந்துநூல் கண்டு' என்று கூறியிருத்தல்.

அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர்வயப்பட்டே பாண்டியன்