உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

ஒப்பியன் மொழிநூல் வேண்டும். கடைக்கழத்திற்குப்பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடிமாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க.

தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க

தொல்காப்பியர்

அகத்தியர்க்குத்

தெரியாத

சில

தொன்னூல்களைக் கண்டமைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், "முந்துநூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் கழக நூல்கள் அறியப்படாதிருந்ததும், அவருக்குத் தெரியாத முதுநூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம்.

உ.வே.

தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்துநூல் கண்டமைபற்றியே, தம் நூலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிடவில்லை யென்க. தொல்காப்பியம் அகத்தியத்திற்குப் பிந்தினதாதலின், அதினும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதையறியாதார் பிற்காலத்தில், தொல்காப்பியர் அகத்தியத்தைச் சாவித்ததாக ஒரு கதை கட்டினர்.

தொல்காப்பியர் அகத்தியரைத் தம் ஆசிரியராகவேனும் ஒரிடத்தும் குறிக்காமையால், அவ் விருவர்க்குமிருந்த தொடர்பு, வேதநாயகம் பிள்ளைக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மிருந்தது போன்றதோ என்று ஐயுறக் கிடக்கின்றது.

அகத்தியர் தமிழ்நூற் பயிற்சியைப் புதுப்பித்தமை

டாக்டர் உ.வே.

உ.வே. சாமிநாதையர் அவர்கள், எங்ஙனம் மடங்களினும் தமிழ்ப்புலவர் வீடுகளினும் பயிலப்படாது குவிந்து கிடந்த பல தமிழ் நூல்களைத் திரட்டி அச்சிட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்களோ, அங்ஙனமே அகத்தியரும் சிறிதுபோழ்து பயிலப்படாது கிடந்த தமிழ்நூல்களைத் திரட் டியாராய்ந்து, தமிழ்நூற் கல்வியைப் புதுப்பித்தாரென்க.

இதனால், தலைக்கழகம் முடிந்தபின்னரே அகத்தியர் தென்னாட்டுக்கு வந்தாரென்பதும், அக் கழகம் நின்றுபோன மைக்குச்