உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

17

சில ஆரியரே காரணமா யிருந்திருக்கலாமென்பதும், இங்ஙனம் தமிழைத் தளர்த்தோரும் தமிழை வளர்த்தோருமாக இருசாரார் தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் என்பதும் நுணித்தறியப் படும்.

மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ பெயர்ச்சொல்லும்

(Plato, B.C. 427) என்றும், அவர் வினைச்சொல்லுமே கண்டு பிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச்சொல்லும் எச்சமுங் கண்டு பிடித்தாரென்றும்,

மேனாட்

டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத்தக்கதும், டையோனி சியஸ் திராக்ஸ் (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமே யென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார்.

வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியி லிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி இராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.

இங்ஙனம்,

முதன்முதல் ஆரிய மறைக்கே

லகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் தமிழ், இதுபோது ஒரு புன்மொழியினும் இழிவா யெண்ணப்படுவதற்குக் காரணம், இற்றைத் தமிழரின் அறியாமையும் மடிமையுமேயன்றி வேறன்று.

இலக்கணமெழுதப்பெற்றதுமான

ஆரியர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்துவைத்தது, அவற்றின் தாழ்வு வளியாகாமைப் பொருட்டேயன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற் பொருட் டன்று. தமிழிலுள்ள கலைநூல்களை மொழிபெயர்த்தும், அவற்றை விரிவாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக்கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறைநூல்களைத் தமிழர்க்கு நேரே யறிவிக்கவே யில்லை. மேனாட்டாரே முதன்முதல் அவற்றைக் கற்றுத்