உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

ஒப்பியன் மொழிநூல்

தமிழின் சொல்வளத்தை நன்றாயுணர்தற்கு நிலைத்திணைச் சொற்களை நோக்கவேண்டும்.

உள்ளீடுள்ள நிலைத்திணை யுயிரிகளை

மரமென்றும், அஃதில்லாதவற்றைப் புல்லென்றும் இருவகையாக

முதலாவது

வகுத்தனர் முன்னோர்.

"புறக்கா ழனவே புல்லென மொழிப”

"அகக்கா ழனவே மரமென மொழிப"

(மரபு. 81)

(மரபு. 21)

என்பன தொல்காப்பியம்.

நிலைத்திணை யுறுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நுட்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயருளது.

இலையென்னும் ஒரேயுறுப்பிற்கு நால்வேறு சொற்களுள. மா வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தாள் என்றும், கரும்பு, பெருஞ்சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஒலையென்றுங் கூறப்படும்.

பூ முதலாவது தோன்றும்போது அரும்பு என்றும், பேரரும்பானபோது போது என்றும், மலர்ந்தபின் மலர் என்றும், விழுந்தபின் வீ என்றும், வாடியபின் செம்மல் என்றும் கூறப்படும். பூ என்பது பொதுப்பெயர்.

து

அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களுள.

பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுடன், செடிப்பூ என்ப தொன்றும் சேர்த்துக்கொள்ளலாம்.

காயின் வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு, திருகுபிஞ்சு, இளம்பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்காய், கன்னற்காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.