உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

21

மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.

பருவத்திற் காய்ப்பது பருவக்காய் என்றும், பருவமல்லாத காலத்திற் காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப்படுகின்றன.

முதிர்ந்தபின் கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன.

செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள், வெவ்வேறு காரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகை யாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தைவகை சொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப்படுகின்றது. சொத்தையான மிளகுப் பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப்படுதல் காண்க.

பழத்தின் தோல்வகைகட்கு, அதனதன் வன்மை மென்மைக் குத் தக்கபடி தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் எனப் பல பெயர்களுள.

விதைவகைக்கு வித்து, விதை, மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்களுள.

இங்ஙனம், ஒவ்வோர் உறுப்பிற்கும் பற்பல சொற்களுள்ளன. அவற்றையெல்லாம் எனது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்

அகரமுதலியிற் கண்டுகொள்க.

நெல்வகை மட்டும் நூற்றுக்கணக்கா யுள்ளன. அவற்றுள் சம்பா என்னும் ஒருவகையே 70 திறமாயுள்ளது.

ஆங்கிலம் இக்காலத்தில் பல்வேறு மொழிகளினின்றும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், எக்கருத்தை யும் தெரிவிக்கவல்ல மொழியாகப் புகழப்படுகின்றது. ஆனால், இவ் விருபதாம் நூற்றாண்டிலும், ஆங்கிலத்திலும் அதுபோன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலிருந்தது மிகமிக வியக்கத்தக்கதே.

தமிழில் ஒருபொருட் சொற்கள் பலபொருள்கட்குள்ளன. பிற திராவிட மொழிகள், பல பொருள்கட்குத் தமிழ்ச்சொற்களையே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டிருக்கின்றன.