உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

ஒப்பியன் மொழிநூல்

கா: இல்இல்லு (தெலுங்கு). மனை - மன (கன்னடம்).

(2) தமிழ்த்தாய்மை

திராவிடச் சொற்கட்கு மூலம் பெரும்பாலும் தமிழிலேயே

உள்ளது.

கா: வென்ன (தெ.) < வெண்ணெய் = வெள் + நெய்

லேது (தெ) < இலது.

செய் (கை) என்பது போன்ற இரண்டொரு சொற்கள், மூலவடிவில் தெலுங்கிலிருப்பது, பொதுவிதிக்குத் தவிர்ச்சியே யன்றி மாறாகாதென்க.

(3) தமிழ்த்தூய்மை

தமிழைப் போலப் பிற திராவிட மொழிகளைப் பிற மொழிக் கலப்பின்றி யெழுத முடியாது.

தெலுங்கில் உடலுக்கு வழங்கும் ஒள்ளு, தேகம் என்னும் இருசொற்களில், ஒள்ளு என்பது உடல் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவு; தேகம் என்பது வடசொல்.

(4) தமிழின் முன்மை

பிற திராவிட மொழிச்சொற்கள் மூலத்திற்குத் தமிழைச் சார்ந்திருப்பதுபோல, தமிழ்ச்சொற்கள் மறித்தும் தம் மூலத்திற்குப் பிறமொழியைச் சார்ந்திருப்பவையல்ல.

(5) தமிழல் திராவிட மொழிகளின் திசைவழக்குத்தன்மை

தமிழல்லாத திராவிட மொழிகளெல்லாம், ஆரியர் இந்தியாவிற்கு வருமுன், தமிழின் கிளைவழக்குகளாகவே யிருந்தன.

தமிழிலுள்ள சொற்கள், இயற்சொல் திரிசொல் திசைச் சொல்

வடசொல் என் று நால்வகையாகத் தொல்காப்பியத்தில்

வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதல் மூன்றும் தன்சொல்; இறுதி யொன்றும் அயற்சொல்.

சொல்;

முதல் மூன்றனுள், முன்னிரண்டும் செந்தமிழ்ச்செ பின்னொன்றும் கொடுந்தமிழ்ச்சொல்.