உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

25

"இனிச் சிங்களம் அந்தோவென்பது; கருநடங் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது.

ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.”

இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே யிருந்தன வென்றும், பின்பு கிளை வழக்குகளாகி, இறுதியில் வடசொற் கலப்பால் வேறு மொழிகளாய்ப் பிரிந்துவிட்டன வென்றும் அறியப்படும்.

தெய்வச்சிலையாரும் இக் கருத்தை யொட்டியே,

"செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தங் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு.

"பன்னிரு நிலமாவன : வையையாற்றின்... நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, அருவாநாடு, அருவா வடதலை என்ப. வை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக் காட்டுமாறு : "கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துடனுறைபுகூறுந் தமிழ்திரி நிலங்களும், முடி யுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிருவருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன" என்றமையானும், 'தமிழ்கூறும் நல்லுலகத்து... பொருளும் நாடி என நிறுத்துப் பின்னுஞ் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு ஒதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :

என

"குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.