உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

ஒப்பியன் மொழிநூல்

று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிறசொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாறு விடை தந்ததன்று.

(8) திராவிடம் என்னுஞ் சொன்மூலம்

பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர் களும் பெரும்பாலும் 'அம்' ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.

கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) - த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.

தமிழம் என்பது தமிள - தவிள -தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர். எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.

3

கால்டுவெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர். அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.

திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கியதாகும். தெலுங்கு தமிழினின்றும் பிரிந்துபோன பின்பு, முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு, ஆந்திர திராவிட பாஷா என்னும் இணை ணப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின், கன்னடம்,

3 Linguistic Survey of India, Vol. IV, p. 298

மலையாளம்

முதலிய