உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

29

மொழிகள் பிரிந்து திராவிடம் பல்கியபின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள், முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லாவற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன.

இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழிகட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருந்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் ம் மிகச்சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க.

1. திராவிடம் வடக்குநோக்கித் திரிதல்

(i) தமிழ்நாட்டில், பாண்டிநாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது.

பாண்டியனுக்குத் தமிழ்நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப்பட்டுள்ளது து. ஆகவே,

சிறப்பிக்கப்பட்டதாகும்.

பாண்டி நாடு

தமிழ்நாடெனச்

சோழநாட்டைத் தமிழ்நாடென்றும், தொண்டைநாட்டைச் “சான்றோருடைத்து” என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழரசர்க் குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டவன் பாண்டியன். அதனாலேயே, இன்று தென்பாகத்தில் வடபாகத் திலிருப்பதுபோன்ற தமிழுணர்ச்சி யில்லை. ஆயினும், நாட்டுப் புறத்திலுள்ள குடியானவர்களிடைப் பண்டைத் தமிழ்ச்சொற் களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண் டிருக்கின்றன.

2. தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்

(1) தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங்களும் பாண்டி நாட்டி லிருந்தமை.

(2) வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழ மொழிகளும் வழங்கல்.

(3) வடசொற்கள் தற்பவமாக வழங்கல்.

கா: சாக்ஷி - சாக்கி.

4 Caldwell's Comparative Grammar, pp. 1, 4, 9, 80, 370