உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

ஒப்பியன் மொழிநூல்

ங்ஙனம் தமிழிலுமுண்டு. ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப் பொருள்படாமல் நிகழ்கால வினையெச்சப் பொருள்படும்.

கா: கேள்வா = கேட்கவா; கேள்போ = கேட்கப்போ.

(6) இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுகளும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன.

கா : ஆயா = வந்தான், வந்து.

போலா = சொன்னான், சொன்னான், சொல்லி.

இவை 'செய்யா' என்னும் வாய்பாட்டு வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினைமுற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது.

வழக்கு: ‘பல்லைப் பிடுங்கிவிடு' என்னும் வழக்கு செருக் கடக்கு என்னும் பொருளில், 'தாந்த் கட்டேகர்தோ' என்றும், 'உயிரைக் கையிலேந்திக்கொண்டு ஓடு' என்பது ‘ஜான்லேக்கர் பாக்' என்றும் இந்தியில் வழங்குதல் காண்க.

(viii) இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிஸ்தான மலைநாட்டில் பிராஹுயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல்.

(ix)

பெலுச்சிஸ்தானத்திற்கப்பால்

வழங்காமையும், திராவிடச் சொற்களே வழங்குதலும்.

திராவிடமொழி

ஒரு மொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், ஆப்பிரிக்கா சீனம் முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிடமொழி தென்னாட்டிற் செவ்வையாயும் வடக்கே செல்லச்செல்லத் திரிந்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும்.

3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புகள்

(1) நிலத்தின் தொன்மை

ஞாலத்தில் குமரிநாடு மிகத் தொன்மையானது. இந்தியா வின் முதற் பெயர் நாவலந்தீவு என்பது. இது நாவலந் தண் பொழில் என்றும்