உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

35

வழங்கும். தமிழ்நாடு முழுவதும் ஒரே பொழில் (சோலை) போலிருந்தமையின், பொழில் என்பது நாடு அல்லது உலகம் என்று பொருள்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் மக்கட் பெருக்கற்ற ஒரு தொன்முதுநிலை யுணரப்படும்.

சரித்திர காலத்திற்கு முற்பட்ட தாழிகளும் அடக்கக் கற்களும் ஏனங்களும், தென்னாட்டிற் பலவிடங்களிற் காணப் படுகின்றன.

"மிகப் பழைமையான

காட்டு மாந்தன்

(orang-utan)

மண்டையோடுகளுள் ஒன்று, ஜாவாவினின்று வந்துள்ளது. அத் தீவு தன்னருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒருகாலத்தில் ஆசிய நிலத்தோ டிணைக்கப் பட்டிருந்தது. அது என்னும் குரங்கு வதியும் இடங்கட்கு அணித்தானது. மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் உயிர் வதிந்த இடமாகத் தெரிதலால், அது நமக்கு மிக முக்கியமானது என்று ஆல்ப்வ்ரெட் கிளாட் (Alfred Clodd) கூறுவதால், அதனோடு ஒரு காலத்தில் இணைக்கப்பட்டிருந்த குமரிநாட்டின் தொன்மையும் ஒருவாறு விளங்கும்.

"" 8

ம்

யானைக்கையும் மடங்கலுடம்பும் உள்ள யாளி என்னும் விலங்கும், அதுபோன்ற பிறவும் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்ததும் அதன் தொன்மையைப் புலப்படுத்தும்.

(2) நிலத்துமொழியின் தொன்மை

இது பின்னர்க் கூறப்படும்

(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை

சரித்திர

நாட்டுவாழ்க்கைநிலை: இக்காலத்திற்போலச் நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுள்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டுமென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது

8 Childhood of the World