உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

ஒப்பியன் மொழிநூல்

மாடு பறையரால்மட்டும் தின்னப்படுகின்றது. மேனாடு களில் அதை எல்லாரும் உண்கின்றனர்.

முல்லைநிலத்திற் போதுமான நீர்வளமும் நிலவளமுமில் லாமையால், மக்கள் அடுத்தாற்போல், மீனைப் பெரிதும் விரும்பினவர் நெய்தல்நிலத்திற்கும் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருதநிலத்திற்குமாகப் பிரிந்துபோயினர்.

பாலைநிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமை யால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும் நேர்ந்தது.

ஐந்து நிலத்திலும் மாந்தர் பரவியபின், குறிஞ்சிநிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலைநிலத்தார் போர்த் தொழில் செய்து மறம் (வீரம்) சிறந்திருந்தமையின் மறவர் என்றும், முல்லைநிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையிலிருந் தமையால் டையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருதநிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல்நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார்.

படகு படவு.க-வ, போலி. படவர்-பரவர்-பரதவர்.ட-ர, போலி. படவர் செந்நிறமாயிருப்பதால் செம்படவர் எனப்பட்டார். பரதவர் விரித்தல் திரிபு.

நகரவாழ்க்கை நிலை

மாந்தர் மருதநிலத்திற்கு வந்தபின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்; அதனால் குடியானவர் எனப்பட்டனர். நிலையாய்க் குடியிருந்ததினால், மருதநிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகரு மாயின. மருதநிலத்தூர்கள் பிற நிலத்தூர்களினும் பலவகையிற் சிறந்திருந்தமையால், ஊர் என்றே யழைக்கப்பட்டன.

ஊர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான ஊரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது.

நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்றும் பிறந்ததே. அது முன்னர்க் கூறப்பட்டது.