உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

ஒப்பியன் மொழிநூல் எவனும், ஒரு படையைத் திரட்டிக்கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு.

பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று. பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழநாட்டின் வடபாகத்திற்குத் தொண்டைமண்டலம் என்றும், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்றும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ் வாற்றுப்படைத் தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி. 1ஆம் நூற்றாண்டாகும். ஆகையால், புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித்தமிழ்ச் சொல்லாதலுங் காண்க.

வழிபாடும் மதமும்

வழிபாடாவது ஒரு சிறுதெய்வத்தையேனும் முழுமுதற் கடவுளையேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு கருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி.

மதி + அம் = மதம். மதித்தல் - கருதுதல். கடவுளைப்பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு. சமை + அம் = (சமையம்) - சமயம். சமைதல் - பக்குவமாதல். பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறாதலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே. மதம் ஆன்மாக்களை வீடுபேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்குவமான வேளை, வேளை, சமயம் பக்குவமாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் நெறிமுறையாகும்.

பழைமை (தொன்மை) - பழமை (புராணம்); முதலியார்- முதலியோர்.

நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்கு களை நோக்குக.