உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

41

எனப்பட்டார். உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத் தில் ஏற்றத்தலைமை முறையில் தலைமாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார்.

கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிப் பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர்.

உழவர் பிறரைநோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமையின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறிய ராயினார் உழுதுண்பாரும் செல்வராயினார் உழுவித்துண்பாரு மாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமர் அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படுபவர். களத்தில் வேலை செய்பவர் களமர்.

கருங்களமரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்கவழக்கம் முதலியனபற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். ங்ஙனமே பிறகுலத்தாரும். இவற்றின் விரிவை எனது தென்னாட்டுக் குலமரபு என்னும் நூலிற் கண்டுகொள்க.

நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணைமயக்கம் ஏற்பட்டது. முல்லைநிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்தி லிருந்த கள்ளர் மறவரும், நெய்தல்நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சிநிலத்திலிருந்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய்வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைஞராயினர். பண்டைத் தமிழ்நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணமென்பது தென்னாட்டுக் குலமரபில் விளக்கப் படும்.

கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர். பல்லவர் என்பார், கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையும், சோழநாட்டை அல்லது தொண்டை மண்டலத்தை யாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே. அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை. தமிழ்நாட்டு மொழிகளும் மதங்களுமே அவர்க்கிருந்தனவும். செல்வமும் மறமும் படைத்த