உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

45

நல்வினையாவன வேளாண்மையும் போர்த்தொழிலும். போர்த்தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மையாகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது, அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப்பற்றியே,

"செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு"

என்றார் திருவள்ளுவர்.

26ஆம் புறப்பாட்டும் இக் கருத்துப்பற்றியதே.

(குறள். 86)

"நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க ”

(புறத். 93)

என்பதனால், போரிலிறந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள் கை யறியப்படும்.

உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த்தொழிற்குரிய மறவரும், இன்றும் தங்களை இந்திரகுலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும் கூறிக்கொள்கின்றனர்.

அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு. அவன் இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான்.

"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு"

"முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி

யொல்லாது வானம் பெயர்”

என்றார் திருவள்ளுவர்.

(குறள். 545)

(குறள்.559)

வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன்முதல் தோன்றியதும் மருதநிலமே.

பாலைநிலத்து மறவர் படைஞராகுமுன், மருதநிலத்து உழவரே போர்த்தொழில் செய்து வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை. இதை,