உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

ஒப்பியன் மொழிநூல்

இனி, ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகளுமுள.

அவையாவன :

(1) தீவணக்கம்

மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக் கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே, முதன்மாந்தர் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

பொருள்கள் தேய்வதால் உண்டாகும் கும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய் - தேயு (வ.).

தேய் - தே - தீ. ஒ.நோ: தேன் - தே(த்தட்டு) - தீ(ம் பால்). தே + உ = தேய்வு - தேவு. தேய்வு - தெய்வு. தெய்வு + அம் தெய்வம். தேவு + அன் = தேவன்.

=

மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெயராயின. தீவணக்கமும் பேய்வணக்கமும் சேர்ந்தே, சேயோன் வணக்கம் முதன்முதல் தோன்றிற்று.

தெய்வம், தேவு, தேவன்.

Skt. deva; L. deus, Gk. theos, god; Ice tivi; W. duw; Gael., Ir. dia; A.S. tiw; E. deity.

திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன்முதற் காட்டியது வடமொழியாரியர். வடமொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென் பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்று வோரெல்லாம், ஒப்பியன் மொழிநூலியல்பைச் செவ்வையா யுணரார். வடமொழி வழக்கற்ற மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருந்தப்புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம். எப்பொருளையும் மூலப்பொருளாகக் கூறலாம்.