உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

51

தீயா னது பொருள்களை அழித்துவிடுவதால் அஞ்சத்தக்கது; சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் நன்மைப் பேறுமே, முதன்முதல் தெய்வ வழிபாடு தோன்றியதற்குக் காரணம்.

தீவணக்கம் பண்டு எல்லாநாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்துவருகின்றது.

(2) நாகவணக்கம்

இந்தியாவிலுள்ள 280 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (king cobra), நல்ல பாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக் கொடியது. நச்சுப்பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென்கண்டத்திலுள்ள செம்பூதப்பாம்பு (giant brown snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும்.

அரச நாகம் அசாம், பர்மா, தென்சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது.

பாம்புகளுள் மிகப்பெரியவை தென்அமெரிக்காவிலுள்ள அனக்கொண்டாவும் (anaconda) இந்தியாவிலும் மலேயாவிலு முள்ள பாந்தளுமே (python). இவை 30 அடிக்கு மேற்பட் வை 30 அடிக்கு மேற்பட்டவை; மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை.

கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில்தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும்.

திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடி யிறக்கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று.

இன்றும் தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்துவருகின்றது.

நகர்வது நாகம். நகர் - நாகர் -நாகம்.

E. snake; A.S. snaca from snican, to creep; Ice. snakr, snokr; Dan. snog; Swed. snok; Skt. naga.