உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

ஒப்பியன் மொழிநூல்

நகத்தில் (மலையில்) உள்ளது நாகம் என்று வடநூலார் கூறுவது சரியன்று. நாகம் -snake (முதல்விரி - prosthesis).

கீழுலகத்தில் பாந்தள் மிகுதியாயிருப்பதால், கீழ் என்பதை அடியென்று நினைத்துக்கொண்டு, ஞாலத்திற்கடியில் ஆதிசேடன் (= முதற்பாம்பு) இருந்து தாங்குவதாகக் கூறினர் பழமையர்.

கீழ்நாட்டில்

நாகவணக்கம்

மிகுதியாயிருந்தமையால்,

பிற்காலத்தில் அதைச் சைவத்திலும் திருமாலியத்திலும் உட்படுத்த வேண்டி, நாகம் சிவபெருமானுக்கு அணியாகவும் திருமாலுக்குப் பாயலாகவுங் கூறப்பட்டது.

சிவபெருமான் நாகத்தைத் தலையி லணிந்திருப்பதாகக் கூறுவது, நாகவணக்கத்தின் பண்டைப் பெருமையைக் காட்டும்.

பண்டை எகிபதியரின் நாகவணக்கமும், கௌ-என்-அத்தென் (Khou-en-Aten) என்னும் எகிப்திய வரசன் நாகவுருவைத் தன் முடியிலமைத்ததும்13, இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

தாருகா வனத்து முனிவர் சிலபெருமான்மேற் பாம்பை யேவியதாகக் கூறுவது பழமைக்கட்டு.

(3) பேய்வணக்கம்

(Demonolatry)

பே என்பது அச்சத்தினால் உளறும் ஒலி. பேம் = அச்சம்.

"பேநாம் உரும்என வரூஉம் கிளவி

ஆமுறை மூன்றும் அச்சப் பொருள"

என்பது தொல்காப்பியம்.

"

(உரி. 69)

பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. ஒ.நோ: E. babble. பே-பேய். ஒ.நோ. E.fay; Fr. fee.

பே-பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும்.கா: பேயப்பேய (விழிக்கிறான்), பேந்தப்பேந்த (விழிக்கிறான்).

பேந்து : ஒ.நோ: Ger. feind; Dut. vijand; A.S. feond; E. fiend.

13 The Funeral Tent of an Egyptian Queen. p, 96