உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

ஒப்பியன் மொழிநூல்

(3) திருமாலை மலைமகளுக்கு அண்ணன் என்றல்.

இவ் விருவர் நிறமும் கருமை யென்பதையும் நோக்குக. கருமை, நீலம், பசுமை என்னும் மூன்றும் ஒன்றாகவே கொள்ளப் படும்.

(4) பிரமன் திருமாலின் மகன் எனல்.

இம் முறை காட்டற்கே, பிரமனுக்குத் திருமாலின் திருவுந்தித் தொடர்பு கூறப்பட்டது.

திருமாலியராய்த் தெரிகின்ற தொல்காப்பியர் காலத்தி லிருந்து திருமால் தனித் தெய்வமாகப் பிரித்துக் கூறப்பட்டு, அதிலிருந்து திருமாலியமே சிறந்து வருகின்றது என்பதற்குச் சான்றுகள் :

(1) தொல்காப்பியம்

i.

'மாயோன் மேய' என்ற நூற்பாவில் மாயோனை முற்கூறுதல்.

ii. "மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்

றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்'

""

என்று மன்னர்க்குத் திருமாலை உவமை கூறல்.

(2) திருக்குறள்

66

(தொல்.1006)

i. 'தாமரைக் கண்ணான்" என்றும், "அடியளந்தான் தாஅய தெல்லா மொருங்கு" என்றும், திருமாலை விதப்பாய்ச்

சுட்டல்.

ii. "தேவிற் றிருமால்" என்று கவிசாகரப் பெருந்தேவ னார் கூறல் (திருவள்ளுவ வெண்பாமாலை).

(3) சிலப்பதிகாரம்

திருமாலைப்பற்றிய பகுதிகளை மிகச் சிறப்பாய்க் கூறல்.

(4) தமிழ் நெடுங்கணக்கு அரி ஓம் நம என்று தொடங்கிய தால் அரிவரியெனப்படுதல்.

(5) இதுபோது சில சைவரும் இரமம் நாமம் அணிதல்.