உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

-

கனலுதல்

=

ஒப்பியன் மொழிநூல்

நெருப்பையும் பின்பு சினத்தையுங் குறித்தது. ஒ.நோ: அழல் - அழலுதல் = சினத்தல். கனல் சினத்தல். சினம் நெருப்பின் தன்மையுடையது. “சினம்... சுடும்" (குறள். 306). நெருப்பின் தன் ஒளியாதலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்றுதலாலும், உரு என்னும் சொல் வடிவங் குறித்தது. “சுவையொளி" என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க.

உரு + உ = உருவு. உருவு + அம் = உருவம். உருவு - உருபு (வேற்றுமை வடிவம்).

உரு, உருப்படி என்னுஞ் சொற்கள், எத்துணையோ பொருள்களில் உலக வழக்கில் வழங்குகின்றன.

உரு என்னுஞ் சொல்லின் வரலாறு மிக முக்கியமானது. இது இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாகக் கூறப்படும். உருவம் என்னுந் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும். இது வடநூலார் கூற்றையொட்டிப் பல்கலைக்கழக அகரமுதலியிற் றலைமாறிக் கூறப்பட்டுள்ளது.

=

சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலு உடையவராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் = உ ருத்திரம் (ருத்ரம்-வ.) சினம். திரம் ஒரு தொழிற்பெயர் ஈறு உருத்திரத்தையுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க.

அக்கம் = கூலம் (தானியம்), மணி. அக்கம் - அக்கு.

66

“அஃகஞ் சுருக்கேல்” என்றார் ஔவையார். கூலம் மணி யென்றும் பொருள்படுவதை, நென்மணியென்னும் வழக்காலறிக.

"கொக்கிற கக்கம்”

(திருப்பு.416)

உருத்திரன்பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்கசந்தி)யும், மரூ உ முறையில் தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க.