உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

63

உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை, பூதநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும்.

உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையர். இங்ஙனம் கூறுவதற்குக் காரணம், ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றனவென்றும், பண்டை யெகிபதில் வழங்கிய ஒரு பழைமைக் கொள்கையை, மேலையாசியாவி லிருந்தபோது ஆரியர் கேட்டறிந்ததே யென்று தோன்றுகின்றது.

பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வடநூற் பொருளையொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது.

ஒ( ம்), குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச்சொற்க ளாகவே தோன்றுகின்றன. ஒங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம் தோற்றம் சிவப்பு என்று பொருள்படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலியவற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக.

ஓ - ஓங்காரம். ஒ.நோ: ரீ - ரீங்காரம்.

+

= அ + உ என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி, குரு என்பதில், கு = குற்சிதம், ரு = ருத்திரன் என்று கூறுவது, News என்பது North East West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப் பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே. ம்

ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக் கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்று கொள்ளினும், பாதுகாப்புப் பாருளதென்று கொள்ளினும், தமிழ்ச்சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை.

ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஒ.நோ:ஏ எ எ எடு. எடுத்தல் = வளர்த்தல். Rear, v.t. (orig.) to raise, to bring up to maturity. (A.S. roeran, to raise.]