உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

ஒப்பியன் மொழிநூல்

-

ஓ-ஓம்-ஒம்பு.ஒ.நோ: ஏ ஏம் -ஏம்பு. ஆ -

அம்பு- அம்பர் கும் - கும்பு. திரும்- திரும்பு.

அ - அம் -

=

ஓம் = காப்பு. ஒம் + படு = ஒம்படு.ஒம்படு + ஐ = ஒம்படை பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல். ஒம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயு முள்ளது. ஒம்படுதல் தன்வினை. ஒம்படுத்தல் பிறவினை வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக. மதம்பற்றிய சில பொதுச்சொற்கள்

மாயை

மாய் + ஐ = மாயை. ஒ.நோ: சாய் + ஐ = சாயை = + ஐ நிழல். மாய் + அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. 'மாயமாய்க் காணோம்', மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச் சொற்களை மாயா சாயா என்று ஆகார வீறாக்கின வளவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற் கிடமானதே.

வீடு

மதந்தழுவிய சில கருத்துகள்

ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப்போல, வெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற்குரியதுமானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர்.

விடு

=

i = (பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை, துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம்.

ஏழுலகம்

பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களா யிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி, எழுகோள்களினின்றும் ஏழுலக வுணர்ச்சி யுண்டான

தாகவுங் கொள்ளலாம்.

ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.