உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

65

எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ.நோ: Indian Ocean, Atlantic Ocean (from Mount Atlas, in the northwest of Africa). எழுகடல்களை நன்னீர், உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக் கூறினர் ஆரியப் பழைமையர்.

எழுபிறப்பு

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயி ரீறாக ஆறும், தேவர் பிறப் பொன்றுமாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என வேறொரு வகையா யெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும். பிராமணப் பிறப்பு ஒரு விரிவளர்ச்சி (Evolution)யெனவும் கூறினர் ஆரியப் பார்ப்பனர்.

பிறப்பா லுயர்வுதாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை; தமிழர் காள்கையன் று. பிரமாவே மக்களை நாற் குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்ஙனம் படைக்கவில்லை? இந்தியாவில்மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்தவரும் இஸ்லாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக்கொள்கை ஆரியராற் புகுத்தப்பட்ட தந்நலக் கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்ற வேறொன்றுமில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப்பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல்நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்த தென்க.

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்றார் திருவள்ளுவர்.

(குறள். 972)

மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க.