உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

71

இராவணன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்தி லுள்ளதே.

பதினெண்கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கே

யுரியவர்.

சோழமரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தி யில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வடநாட்டுச் சூரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது.

எண்டிசைத் தலைவர்

கிழக்கில் வேந்தன் (இந்திரன்)

இந்திரன் என்று பழைமைநூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவதி என்னும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டி நாட்டின்மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ்க்கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர்பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந்திருப்பதையும், தேவருலகிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக.

எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒரு காலத்தில் ஒரு தலைமுறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டுகொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெய ரிருந்திருக்கலாம்.

தென்கிழக்கில் தீ (அக்கினி)

று

ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பல விடத்தில் எரிமலைகள் எரிந்துகொண்டிருப்பதைத் திணைநூலிற் காண்க.

தெற்கில் கூற்றுவன் (யமன்)

இவனைப்பற்றி முன்னர்க் கூறப்பட்டது. மறத்திற் சிறந்த எருமைக்கடா19 மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது.

19 All About Animals, pp. 54, 55