உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தென்மேற்கில் அரக்கன் (நிருதி)

தென்னாப்பிரிக்க

ஒப்பியன் மொழிநூல்

மக்களையும் பண்டு

தமிழகமும்

ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக.

மேற்கில் வாரணன் (வருணன்)

வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலி லிருந்த

நிலம் அமிழ்ந்துபோனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான்.

வடமேற்கில் காற்று (வாயு)

இது ஒருகால் சகாராப் பாலைநிலக் காற்றா யிருக்கலாம்.

வடக்கில் குபேரன்

இவன் இராவணன் காலத்தவன். இவ் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ் விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தியையும்(புஷ்பக விமானம்) கவர்ந்துகொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் முத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனா யிருந்தான்.

வடகிழக்கில் ஈசானன்

ம்

ஈசானன் ஒரு சிவவடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையிலிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே.

இதுகாறும் கூறியவற்றால், இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே யென்பதும், "ஆரியர் நாகரிகத்தில் திராவிடராக, திராவிடர் மொழியில் ஆரியரானார்" என்று கில்பெர்ட் சிலேற்றர் (Gilbert Slater) அறிந்துகொள்க.

கூறுவது

நாகர்

சரியே

என்பதும்

நாகர் என்பார் முதன்முதல் நாகவணக்கங் கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ்நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.