உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

“கீழ்நில மருங்கி னாகநா டாளு மிருவர் மன்னவர்”

என்பது மணிமேகலை.

73

(9:54-55)

நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடைய வராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தலையி லணிந்தவராயு மிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையி லணிந்ததாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்கு வதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே யிருத்தல் காண்க.

அனுமான் கடல் தாண்டும்போது நாகரைக் கண்டானென் றும், மைந்நாகமலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதன னால் கங்கையி லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென் று நாககன்னியை மணந்தானென்றும் கூறியிருத்தல் காண்க.

நாகர் அல்லது கீழ்த்திதிசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும்,

நரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.

'சாதுவ னென்போன் தகவில னாகி... நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினன். நக்க சாரணர் நயமிலர் தோன்றி...

ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் "

என்னும் மணிமேகலையடிகளைக் காண்க.

நக்கம் - அம்மணம்)

அம்மணராயும்,

(16:4-59)

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது