உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

ஒப்பியன் மொழிநூல்

வெயிலில் உழைப்பதாலும், நாகரிக வாழ்க்கையும் சிறந்த வுணவும்

இல்லாமையாலுமே,

தாழ்த்தப்பட்டோருள்

அவர் அங்ஙன இரண்டு மூன்று

மிருக்கின்றனர்.

தலைமுறையாய்

நாகரிகமானவர் மேலோரைப் போலிருத்தலையும், பிறந்தவுடன் ஒரு பறைக் குழந்தையைப் பார்ப்பனக்குடியிலும், ஒரு பார்ப்பனக் குழந்தையைப் பறைக்குடியிலும் விட்டு வளர்க்க உருவம் மாறுபடுவதையும் நோக்குக.

4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை

மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேரநாடாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன்கீழ், அது தலைசிறந்த தமிழ்நாடா யிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமய மாய்க் கிடக்கின்றது. துபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும் போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற் போகாது.கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ்நாடாகவே யிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது. அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே யிருந்திருக்க வேண்டும். 12 நூற்றாண்டிற்குப் பின்தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற்பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது; பிற்பருவத்தில்தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரிய வெழுத்தை யமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரியமய மாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந்நூறாட்டைப் பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் நாட்டைப் பரசுராம க்ஷேத்ரம் என்றும், மிகப் பழைமையான தென்றும், தமிழ்நாடன்றென்றும் சொல்லிக்கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை.

மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil