உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

81

மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமே யாகுமென்பது ஆரியர் கருத்து.

(7) பண்டைத்தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல்.

(8) தம்பிராட்டி, சிறுக்கன் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல்.

(9) மருமக்கட்டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.25

ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு டகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்குவதாயிருந்தால், இவ் விரு நிலப்பகுதிகளும் ஒருகாலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டு மென்பதைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரிநாட்டிலும் பெண்வழிச் செல்வமரபு வழங்கியிருக்கவேண்டும். தாய் + அம் = தாயம். தாயினின்றும் பெறும் உரிமை தாயம்.

ம்

பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுதுபோக்குகள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரே படியா யிருக்கின்றன .

ழ்நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டடங்களின் அமைப்பும் வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாள நாட்டில் உள்ளவை போன்றே யிருக்கின்றன.

கடாரம் ஜப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நில நடுக்கம் வெள்ளம் முதலியனபற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்ந்துகொண்டே யிருக்கின்றன. குமரி நாட்டிலும் இவ் வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களா யிருந்தமையும், பெயர்வுப் பொருளுடையனவா யிருத்தலையும் நோக்குக. பண்டு தென்பெருங் கடலில், குறைந்தது ஒரு பிறை வட்டமான எரிமலைத் தொட ரிருந்திருத்தல்வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக்

25 Peeps at Many Lands - The South Seas, pp. 64-6