88
வேர்ச்சொற் கட்டுரைகள்
காற்று வெளிவரும் ஓசை, பெரும்பாலும் சகரவொலியாலும், சிறுபான்மை சகரத்திற்கு ஒருபுடையினமான தகரவொலியாலும், குறிக்கப்படும். மூசு என்னும் சொல்லும், காற்பந்திற்குக் காற்ற டிப்பதைக் குறிக்கும் புசுக்கு என்னும் ஒலிக்குறிப்பும், சகரத்தை யுடையன. Gas என்னும் ஆங்கிலச் சொல்லிலும் சகரமிருப்பது கவனிக்கத்தக்கது. வான் எல்மாந்து (Van Helmont) என்பவர்gas என்னும் சொல்லை, ghaos (chaos) என்னும் கிரேக்கச் சொல்லினின்று திரித்தார் என்பது, அத்துணைப் பொருத்த முடைத்தன்று. காற்றின் தொழிலைக் குறிக்கும் வீசு, விசிறு, விசுக்கு (whisk) என்னும் சொற்களும் சகரத்தைக் கொண்டுள்ளன.
நெருப்பெரித்ததற்குக் காற்றை ஊதும்போது, ஊகாரத்தையே ஒலித்தற்கேற்ற இதழ் குவிவும், சகர தகரம் போன்ற உரசொலி களையே (fricatives) ஒலித்தற்கேற்ற வாய்நிலையும் அமைந் திருத்தலால், அந் நிலையில் வாய்வழிக் காற்றை வெளிவிடுஞ் செயலை, ஊசு, ஊது என்னுஞ் சொற்களே குறிக்க முடியும். ரகரம் உருளொலியாதலால்(trill) அத்துணைப் பொருத்தமான தன்று.
காற்றை வெளிவிடும்போதும் உள்ளிழுக்கும்போதும் அமையும் வாய்நிலை, ஏறத்தாழ ஒன்றே. அதனால் வெயிலில் அலைந்தவன் இளைப்பாற உட்காரும்போது வாய்மொழிக் காற்றை வெளிவிடுதலையும், உறைப்பான உணவை யுண்பவன் வாய்வழிக் காற்றை உள்ளிழுத்தலையும், ஊசு என்னும் ஒரே சொல் குறிக்க லாயிற்று.
‘ஊசென்று உட்கார நேரங் கிடையாது’, 'ஊசு ஊசென்று அவ்வளவு சோற்றையும் உண்டுவிட்டான்', என்னும் வழக்குகளை நோக்குக.
நெருப்பெரித்தல் போன்ற செயலிற் காற்றை வெளிவிடுதலை, ஊது என்னுஞ் சொல் குறித்தது. சகர தகரம் ஒன்றற்கொன்று போலியாக வரும். எ-டு : ஓசை - ஓதை, நத்து- நச்சு.
=
ஊதுதல் = 1. நெருப்பெரிக்க ஊதுதல். ஊது ஊத்து (தொ.பெ.). 2. விளக்கவிக்க ஊதுதல். 3. சூடாற்ற ஊதுதல். 4. நோவு தீர ஊதுதல். ‘ஊது’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் 5. துகள் நீக்க ஊதுதல். ஊதிப்போடுதல் எளிதில் வெல்லுதல். உன்னைக் கசக்கி ஊதிவிடு வேன் என்னும் வழக்கை நோக்குக. 6. ஊதாங்குழ லூதுதல். ஊதாங் குழல், ஊதாங்குச்சி என்பன ஒருபொருட் சொற்கள். 7. இசைக்குழ லூதுதல்.