‘ஊது’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல்
89
ஊதி, ஊதிலி (மகுடி), ஊதுகொம்பு முதலியன துளையுள்ள இசைக்கருவி வகைகள். ஊதல் என்னும் சொல் எக்காளம், தாரை, கொம்பு முதலியன ஊதிச்செல்லும் ஊர்வலம்பற்றி ஆரவாரத்தையுங் குறிக்கும். ஒ.நோ : E. fanfare - fonforonade.
8. தட்டான் பொன்னை ஊதிப் புடமிடுதல். ஊதுகட்டி, ஊதுவெள்ளி என்பன சொக்கவெள்ளியைக் குறிக்கும் பெயர்கள். 9. உலைத்துருத்தி அல்லது இசைத்துருத்தி யூதுதல். இசைத்துருத்தியின் பெயர் பின்வருமாறு திரியும்: துருத்தி - துத்தி - தித்தி. 10. ஊத்தாம்பை யூதுதல். ஊத்தாம்பை ஊத்தாம் பெட்டி, ஊத்தாம் பேழை என்றும் சொல்லப்பெறும்.
11. காய்களை மூட்டம்போட்டு ஊதிப் பழுக்க வைத்தல். 12. நோயாளி யுடம்பிற்குள் ஊதி மந்திரித்தல். 13. வண்டு ஒலித்தல். “சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ” (திருவா. 10: 1). 14. வண்டு ஊதித் தேனை நுகர்தல். 15. வண்டு ஊதி தி மரத்தைத் துளைத்தல்.
16. உடல் வீங்குதல்.
ஊத்தம் = வீக்கம். தெ. ஊத. ஊதல் = வீக்கம்.
=
ஊதை = வளிநோய் (வாதம்). ஊத்து = வளிநோய்.
ஊதுகணை, ஊதுகரப்பான், ஊதுகாமாலை, ஊதுமாந்தம் என்பன ஊதுநோய் வகைகள்.
ஊதுசுருட்டை, ஊதுவழலை, ஊதுவிரியன் என்பன உடம்பை ஊதச்செய்யும் நச்சுப்பாம்பு வகைகள்.
17. மிகுதல்.
ஊத்தப்பம், ஊதுமாக்கூழ் என்பன எழும்பும் சிற்றுண்டி வகைகள்.
ஊது
ஊதியம்
=
1. செலவிற்குமேல் மிகுந்த வரவு.
"முதலிலார்க் கூதிய மில்லை” (குறள். 449). 2. பயன். “ஊதியங் கருதிய வொருதிறத் தானும்” (தொல். பொருள் 41).
ஊதியம் வேறு; சம்பளம் வேறு.
ஊதிய இழப்பு - வ. லாப நட்டம்.
ஊது - ஊதாரி = துகளை ஊதிப் போக்குவதுபோல் செல்வத்தை யெல்லாம் வீண் செலவு செய்தழிப்பவன்.
“கொடையிலாத வூதாரி”
(திருப்புகழ்)
ஊதாரிபடுதல் = கேடுறுதல்.
"உடலூ தாரிபட் டொழிய”
(திருப்பு.904)