உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

66

xiii

இயன்மொழியாதலால், பெரும்பாற் சொற்களின் வேர்வடிவை அல்லது வேருறுப்பை இன்றுந் தாங்கி நிற்கின்றது. இதனாலேயே, எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" என்று தொல்காப்பியம் (பெயரியல், 1 ) வீறு கொண்டு முழங்குகின்றது. இங்ஙனங் கூறும் நிலை வேறு எம் மொழிக்கும் இல்லை. அதனால், வடமொழியாளர் ஒருபாற் சொற்களை இடுகுறி யென்றார். மேலை வண்ணனை மொழிநூலாரோ, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதிகளே என்று, தம் இருவகைக் கண்ணையும் மூடிக்கொண்டனர்.

மக்களைப் போன்றே, சொற்களும் குடும்பங் குடும்ப மாகவும், குலங்குலமாகவும், இனம் இனமாகவும் கொடி வழி (ge- nealogical) முறையில் இயங்குகின்றன.

வேர் என்னும் உவமையாகுபெயர்பற்றி வேர்ச்சொல்லை வேறாக முத்திறப்படுத்திக் கூறினும், மூலமும் திரிவும் என்னும் முறையில் வேர் அடி முதனிலை என்னும் வகையீடும் ஆணிவேர், பக்கவேர், கிளைவேர் என்னும் வகையீடும் ஒன்றேயெனக்கொள்க.

திரவிடமும் ஆரியமும் திரிமொழிகளாதலால், அவற்றிலுள்ள திரிசொற்கள் பல, வேரோ மூலமோ தெரியாவாறு உருமாறியுள்ளன. எ-டு : மாறு மாற்றம் - தெ. மாட்ட= சொல். காண் (அறி) - வ. ஜ்ஞா

இடைசுழி - (டேசுழி) - வ. தேகலி.

வள் - வர் - வார்-வாரி -இலத் மரெ ( ஆயசந)

-

இது இதோ ஆங். லோ (டடி)

-

=

விடை - விடலை - கிரேக். இதலொஸ் *(வையடடிள்)

னி மலையா, சிங்கபுரம், தென்னாப்பிரக்கா முதலிய வெளிநாடுகட்குத் தனித்தனியாகவும் குடும்பங் குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக வாழினும், அவர்களின் முன்னோராலும் தமிழ்நாட்டு உறவினராலும் அவர்கள் தமிழர் எனறே அறியப்படுதல் போல், தமிழ்ச் சொற்களும் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன்மொழிகளிற் சென்று வழங்கினும்,