உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xiv

வேர்ச்சொற் கட்டுரைகள்

அவற்றின் மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும், அவை தமிழ் என்றே அறியப்படும் என அறிக.

எ-டு :

தமிழ்

சமற்கிருதம்

குலம்

குல

கதம்பம்

கதம்ப

கலகம்

கல்ஹ

கலுடம்

கலுஷ = கலங்கல்

கலுழன்

கருட (Garuda)

இச் சொற்களெல்லாம் தமிழே என்பதை, மேற்காட்டிய குல் என்னும் வேரினின்று தோன்றிய கொடிவழிச்சொற்களைநோக்கிக்காண்க.

இங்ஙனம் ஆழ்ந்தாராய்ந்து உண்மை காணாததனாலேயே, வடமொழி தேவமொழியாதலால் வேறெம் மொழியினின்றும் கடன்கொள்ளா தென்னும் ஆரிய ஏமாற்றை, இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்ப் பேராசிரியர் பலர் பேதைத்தனமாய் நம்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ப் பகைவரும் இதைப் பயன் படுத்திக் கொண்டு, மேன்மேலும் தம் பதவி யுயர்த்துவதிலும் பணம் பெருக்குவதிலுமே கண்ணாயிருந்து, உண்மைத் தமிழாராய்ச்சியாளர் தமிழ்த்தொண்டு செய்யாவண்ணம் வலுத்த முட்டுக்கட்டையிட்டும் வருகின்றனர்.

வேர்ச்சொற்கள் சிறுவேரும் பெருவேரும் என இருவகைய. அவற்றுள் முன்னவை பன்னூற்றுக் கணக்கின; பின்னவை ஒரு நூற்றிற் குட்பட்டவை. இவ்வுண்மை என் கடந்த அரை நூற்றாண்டு மொழியாராய்ச்சியிற் கண்டது. சமற்கிருத்திலும் மேலையாரிய மொழிகளிலும் வேர்ச்சொல்லெனக் காட்டப்படுபவை, பெரும் பாலும் உண்மையான வேர்ச்சொற்களல்ல; உண்மையான சிலவும் தமிழினின்று திரிந்தவையே.

தமிழ், ஆரியச் சூழ்ச்சியினால், நெடுங்கணக்கு முதல் பொருளிலக்கணம் வரை எல்லா நிலைகளிலும் எல்லாத் துறை களிலும் தருக்கப் பொருளாக்கப்பட்டிருப்பதால், தமிழாசிரியர் எத்துணைப் பெரும்புலவரேனும், மொழியாராய்ச்சியும் நடுநிலை