உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

XV

அஞ்சாமை தன்னலமின்மை மெய்யறி யவா என்னும் நாற்பண்பும் இல்லாதவர், வேர்ச்சொற்களைத் தொகுப்பது, குருடன் கண் மருத்துவமும் செவிடன் இசையாராய்ச்சியும் சப்பாணி தாண்டவம் பயிற்றலும், செய்வதொத்ததே. கல்விவேறு; ஆராய்ச்சி வேறு.

வாழ்நாள் முழுதும் வேர்ச்சொல் லாராய்ச்சி மூழ்கிக் கிடந்த ஒருவன் இருக்கவும், அவனைப் புறக்கணித்துவிட்டு, வேர்ச்சொல் தொகுப்பிற்கு ஒரு குப அமர்த்த வேண்டுமென்பது, கூட்டுக் கொள்ளையடிக்கும் தன்னலத் தமிழ்ப் பகைவரின் குறும்புத் தனமான கூற்றேயாகும்.

தமிழிலுள்ள இருவகை வேர்ச்சொற்க ளெல்லாவற்றையும் தொகுப்பின், அஃது ஒரு பெரிய அகரமுதலியாக விரியும். அப்பணியை ஓர் அரசு அல்லது பல்கலைக் கழகம் தான் மேற்கொள்ளவியலும். அத்தகைய நிலைமை இன்றின்மையால், வேர்ச்சொற்கட்டுரைகள் என்னும் பெருவேர்ச்சொல் திரட்டொன்றை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட முன்வந்தது, மிகப் பாராட்டத் தக்கதாகும், இது தலைசிறந்த தமிழ்ச் தொண்டாதலால், தமிழுலகமும் தமிழ் நாட்டரசும் பல்கலைக்கழக நல்கைக் குழுவும் (University Grants Commission), இக் கழகத்திற்குப் பெரும் பொருளுதவி செய்தூக்கற்குப் பெரிதுங் கடப்பாடுடையன.

காட்டுப்பாடி விரிவு,

200ச, கும்பம், கஅ, 1.3.1973.

தேவநேயன்