உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறப்பு முன்னுரை

xvii

இல்லாதனவும், செயற்கை வடிவு கொண்டனவுமாகவே யிருக்கும். ஆதலால், அம்மொழிகளை அடிப்படையாய் வைத்துத் தமிழை ஆய்வார்,ஆங்கில நாட்டுவரலாற்றை ஆத்திரேலியாவினின்றோ? அமெரிக்கா வினின்றோ தொடங்குபவரேயாவர்.

தமிழ்வேர்ச் சொற்களெல்லாம், வேரும் அடியும்; கவையும் கொம்புங் கிளையும் போத்தும் குச்சுங்குழையுமாய்த் தொடர்ந்தும் வளர்ந்தும் இருப்பது, இக்கட்டுரைத் தொடராற் காட்டப்பெறும்.

ஞா. தேவநேயன்