6
M. ameyuka - amekka.
வேர்ச்சொற் கட்டுரைகள்
அமர் - அமரிக்கை = அடக்கம். T. amarika, M. amarcca.
=
அமர்தல் = 8. விளக்கணைதல்.
“விளக்கானது காற்றினால் அமருமா போல” (குருபரம். 305)
M. amaral. அமர்- அமர்த்து. அமர்த்துதல் = அழாதிருக்கச் செய்தல்.
அமை- அமைதி. அமைவன் = முனிவன்.
அமர்தல் = 9. அமைதல், ஏற்படுதல்.
வீடமர்தல் = குடியிருக்க வீடு ஏற்படுதல்.
அமைதல் = (6) ஏற்படுதல்.
=
அமைத ல் (7) சமைதல், பதமாதல், நுகருதற்கேற்ற நிலைமையை யடைதல், அணியமாதல் (ஆயத்தமாதல்).
அமைத்தல் = ஆக்குதல், சமைத்தல்.
"ஐந்துபல் வகையிற் கறிகளும்... அமைப்பேன்”
அமை- சமை. M. camayuka (சமையுக)
(பாரத. நாடுகர. 15)
ஒ.நோ: இறகு - சிறகு, இளை- சிளை, உருள்- சுருள், உலவு- சுலவு, உழல் - சுழல், எட்டி - செட்டி, ஏண்- சேண்.
சமைத்தல்
=
ஆக்குதல், பதப்படுத்தல், தகுதியாக்குதல்,
அணியமாக்குதல். M.camekka (சமெக்க).
சமைதல்
=
சோறாதல், பெண் பூப்படைதல், மணஞ்செய்யத் தகுதியாதல், தகுதியாதல்.
சமை– சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) இறைவனையடையத் தகுதியாகும் ஒழுக்கம் அல்லது நெறி.
அரிசி உண்ணச் சமைதலும், பெண் மணக்கச் சமைதலும் போன்றதே, ஆதன் இறைவனை அடையச் சமைதல்.
சமைவு = நிலைமை.
அமைதல் = (8) நேர்தல்.
அமை - அமையம் = நேரம். ஒ.நோ : நேர் - நேரம். நேர்தல் - நிகழ்தல்.
"ஆனதோ ரமையந் தன்னில்'"
(கந்தபு. திருக்கல். 72)